விஜய் – ராகுல் காந்தி இருவரும் ஒரே காரில் பயணம்… தோனி உணவகத்தில் தேநீர்!

 
விஜய்

 

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (அக்.10) சென்னையில் சந்தித்துப் பேசினார். நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ராகுல் காந்திக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பின்னர், ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.

 தமிழக அரசியல் சந்திப்பு: முதல்-அமைச்சர் விஜய் மற்றும் ராகுல் காந்தி நாளை சந்திப்பு. Tamil Nadu Political Meet: CM Vijay and Rahul Gandhi to meet tomorrow

மாணவர்களின் கல்விப் பிரச்சினைகள், நீட் உள்ளிட்ட தேர்வுகள், கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகிய விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்களைச் சந்தித்து வரும் ராகுல் காந்தி, இன்று சென்னையில் நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லத்துக்குச் சென்ற ராகுல் காந்திக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரு தலைவர்களும் கட்சி நிர்வாகிகள் இன்றி தனியாக ஆலோசனை நடத்தினர்.

Vijay in CM avatar with Rahul Gandhi & MS Dhoni 😱🔥 Powerful fan-made moment goes viral 💥 #ThalapathyVijay #RahulGandhi #MSDhoni #Trending #Viral #FanMade

இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஆலோசனையில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக விரிவான தகவல் வெளியிடப்படவில்லை.

 

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பு நிறைவடைந்ததும், விஜய்யும் ராகுல் காந்தியும் நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.தொடர்ந்து, சென்னை பாலவாக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனிக்குச் சொந்தமான உணவகத்துக்குச் சென்ற இருவரும் அங்கு தேநீர் அருந்தினர். இரு தலைவர்களும் ஒரே காரில் பயணம் செய்ததும், சந்திப்புக்குப் பிறகு ஒன்றாக உணவகத்துக்குச் சென்றதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதுவிஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருப்பினும், சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அல்லது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.