மதுராந்தகத்தில் நாளை விஜய் ரோடு ஷோ! 45 கி.மீ. பயணம்... முழு விவரம்

 
விஜய் பிரச்சாரம்

 

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நாளை (அக்டோபர் 2) ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளார்.மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். ஏற்கனவே கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மதுராந்தகம் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்திருந்தார்.

விஜய் பிரச்சாரம்

நாளைய பிரசாரத்தின்போது சுமார் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு விஜய் ரோடு ஷோ செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரோடு ஷோ நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாமண்டூர், படாளம் கூட்ரோடு, கருங்குழி அய்யனார் கோவில், சவரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக விஜயின் ரோடு ஷோ செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் பிரச்சாரம்

மேலும், நாளைய பிரசாரத்திற்கு முன்னதாக விஜய் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும், பின்னர் பங்காரு அடிகளார் நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுராந்தகம் தொகுதியில் நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜயின் நாளைய ரோடு ஷோ தேர்தல் பிரசாரத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.