"விஜய் - சங்கீதா விவகாரத்தைப் பொதுவெளியில் பேச வேண்டாம்" - தவெக நிர்மல்குமார் வேண்டுகோள்!

 
நிர்மல்குமார் சங்கீதா

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள செய்தி வெளியானதிலிருந்து, பல்வேறு தரப்பினரும் இது குறித்துக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊடக நண்பர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனாளர்கள் தவெக தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரங்களைப் பொது வெளியில் விவாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும், அவருக்கு என்று ஒரு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை இருப்பதை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் சங்கீதா

சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே தற்போது இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாற முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சங்கீதாவை இழிவுபடுத்தும் விதமாகப் பதிவிடும் தவெக தொண்டர்களுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. தற்போது கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள நிர்மல்குமாரும் இது குறித்துப் பேச வேண்டாம் எனக் கூறியிருப்பது, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காமல் இருக்க எடுக்கப்பட்ட முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

சங்கீதா

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விவாகரத்து மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 10ம் தேதி நடைபெறவுள்ளது. அதுவரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனத் தவெக தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.