விஜய் - சங்கீதா விவாகரத்து: 26 ஆண்டுகால பந்தம் முடிகிறதா? ரூ.35 கோடி செட்டில்மெண்ட்... நாளை கோர்ட்டில் விசாரணை!

 
விஜய் - சங்கீதா விஜய் - சங்கீதா

தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாகப் புகைந்து கொண்டிருந்த விவாகரத்து விவகாரம், தற்போது கிளைமாக்ஸை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது மனைவி சங்கீதாவைப் பரஸ்பரம் பிரிய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை (ஏப். 20) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சென்னையில் நேற்று இருதரப்பு வழக்கறிஞர்களும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மும்பையிலிருந்து வந்த முக்கிய ஜோதிடர் ஒருவரின் முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

விஜய் சங்கீதா

விஜய் தனது தேர்தல் வேட்புமனுவில் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பரஸ்பர விவாகரத்திற்காக ரூ.250 கோடி வரை செட்டில்மெண்ட் கேட்டதாகத் தெரிகிறது. மேலும், மகன் மற்றும் மகளின் எதிர்காலத்திற்காகவும் கணிசமான தொகையைக் கோரியுள்ளனர்.

மனைவிக்கு மட்டும் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் தருவதாகவும், மகன் மற்றும் மகளின் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் விஜய் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

சங்கீதா

கடந்த 2021-ம் ஆண்டு முதல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும், தற்போது அரசியல் பயணத்தில் முழுமையாக ஈடுபட விஜய் விரும்புவதால் இந்தப் பிரச்சனையைச் சட்டப்பூர்வமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 1999-ல் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிய முடிவெடுத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை நீதிமன்றத்தில் விஜய் நேரில் ஆஜராவாரா அல்லது வழக்கறிஞர்கள் மூலம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்பது நாளை தெரிந்து விடும்.