விஜய் சேதுபதி வரலாற்று சாதனை... சர்வதேச எம்மி விருது மேடையில் முதல் இந்திய நடிகர்!

 
எம்மி

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதிக்கு சர்வதேச அளவில் புதிய கவுரவம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள 54-வது சர்வதேச எம்மி விருது விழாவில், விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக அவர் பங்கேற்க உள்ளார்.

Vijay Sethupathi to Present Award at International Emmys

வரும் நவம்பர் 23-ம் தேதி நடைபெறவுள்ள இந்த விழாவில் விஜய் சேதுபதி விருது வழங்க உள்ளதன் மூலம், சர்வதேச எம்மி விருது மேடையில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெறுகிறார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கு முன்பு இந்தியர்களின் பங்களிப்பு

கடந்த 2016-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற பிரைம் டைம் எம்மி விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியிருந்தார். அதேபோல், 2024-ம் ஆண்டு சர்வதேச எம்மி விருது விழாவை நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் தொகுத்து வழங்கினார். தற்போது விஜய் சேதுபதி விருது வழங்கும் பொறுப்பை ஏற்க உள்ளார்.

Vijay Sethupathi To Make History As First Indian Presenter At International Emmy Awards

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் கலைஞர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் முக்கியமான விழாவாக சர்வதேச எம்மி விருதுகள் கருதப்படுகின்றன. இந்த விழாவில் விஜய் சேதுபதியின் பங்கேற்பு இந்தியத் திரையுலகிற்கு மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரமாக அமைந்துள்ளது.