“தாய்மாமன்” விஜய்க்கு நன்றி... த்ரிஷா படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்! மதுரையில் பரபரப்பு

 
vijay

 

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (செப்.28) மதுரை வந்த நிலையில், நகரின் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்ட த்ரிஷா நற்பணி மன்றத்தின் போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ளன.மதுரை மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், ஒரு புறம் பச்சிளம் குழந்தையை முதலமைச்சர் விஜய் கையில் ஏந்தியிருக்கும் புகைப்படமும், மறுபுறம் நடிகை த்ரிஷாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.

போஸ்டரில், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் இல்லை என்று வருத்தப்படும் தாய்மார்களுக்கு தன்னையே தாய்மாமன் என கூறி மகிழ்ச்சியடைய செய்த முதலமைச்சர் விஜய்க்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

மீனாட்சி அம்மன் விஜய்

விஜய்யின் மதுரை வருகையை முன்னிட்டு ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக த்ரிஷாவின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.முன்னதாக மதுரையில் த்ரிஷா நற்பணி மன்றம் சார்பில் அவரை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது விஜய்யின் மதுரை வருகையையொட்டி மீண்டும் த்ரிஷா தொடர்பான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, த்ரிஷா அரசியலுக்கு வருவார் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இந்த போஸ்டர் விவகாரம் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. எனினும், இந்த போஸ்டர்களை ஒட்டியது தொடர்பாக அதிகாரப்பூர்வ அரசியல் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

vijay

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை விஜய் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்கமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.இதனால் விஜய்யின் மதுரை வருகை ஒருபுறம் அரசு திட்டத்தின் தொடக்க நிகழ்வாக கவனம் பெற்றுள்ள நிலையில், மறுபுறம் த்ரிஷா படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களும் பேசுபொருளாகியுள்ளன.