இளையதளபதி விஜய்க்கு கடைசிப் படத்தில் சம்பளம் ரூ.250 கோடி?!

 
விஜய் வெற்றிக் கழகம்

தற்போது, நடிகர் விஜய் மாநாடு பட இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தில் விஜய்  இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒருவர் வில்லன் என்கிறார்கள்.

விஜய்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக விஜய், வரியுடன் சேர்த்து ரூ.200 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், அவர் அடுத்து நடிக்கும் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சி தீவிரமாக களம் இறங்கப் போகிறது.

 

நடிகர் விஜய்

 

இதற்கிடையே அவர் கடைசியாக நடிக்கும் படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ படத் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கிறார் . இந்தப் படத்தை இயக்க ஹெச். வினோத், தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உட்பட 3 இயக்குநர்கள் கதை சொன்னதாகவும் அதில் ஹெச். வினோத் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். இந்தப் படத்துக்காக விஜய்-க்கு வரியுடன் சேர்த்து ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web