6 மாத ஆட்சிக்கு பிறகு விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்! மாமல்லபுரத்தில் முக்கிய ஆலோசனை

 
மாமல்லபுரம்

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 11) நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.

தவெக விஜய்

தவெக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆட்சியின் செயல்பாடுகள், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகள், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அண்மைக்காலமாக சில தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் ஒழுக்கம், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு மற்றும் பொதுமக்களிடம் கட்சியின் நற்பெயரைப் பாதுகாப்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.எனினும், கூட்டத்தின் முழுமையான நிகழ்ச்சி நிரல் மற்றும் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கூட்டம் முடிந்த பின்னரே முக்கிய முடிவுகள் குறித்த விவரங்கள் தெரியவரும்.