‘2031 தேர்தலில் விஜய் VS தனுஷ் தான் போட்டி’... விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!

 
விஜய் தனுஷ்

2031-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய்யை எதிர்கொள்ளத் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய திராவிடக் கட்சிகளும் கைகோர்த்து இணைய வேண்டிய சூழல் உருவாகும் என முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். வரும் 2031 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் அரசியல் செல்வாக்கை எதிர்கொள்ள, பாரம்பரிய எதிரிகளான திமுகவும் அதிமுகவும் இணைந்து போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார். தமிழகத்தின் இரு துருவ அரசியலை மாற்றியமைத்த விஜய்யின் ஜாதகத்தில் உள்ள பலம், அடுத்த தேர்தலிலும் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் ஆய்வு

நடிகர் தனுஷ் ஒருவேளை அரசியலுக்கு வர முடிவெடுத்தால், அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தனுஷ் அரசியலில் களமிறங்கும் பட்சத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, அவர் நேரடியாகவே இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்று ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

ஜோதிடர் ராதன் பண்டிட் விஜய்

ஒரு கட்டத்தில் தமிழக தேர்தல் களம் முற்றிலும் மாறி, முதலமைச்சர் "விஜய் VS தனுஷ்" இடையிலான நேரடிப் போட்டியாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அவரது ஜாதகக் கட்டத்தில் தென்படுவதாக விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.