விஜய் Vs உதயநிதி... எகிறும் எதிர்பார்ப்பு... இன்று மீண்டும் கூடும் தமிழக சட்டப்பேரவை - முதலமைச்சர் விஜய் பதிலுரை!
3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பதிலுரை வழங்குகிறார்.
கடந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அரசின் சட்டம்-ஒழுங்கு குறித்தும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தான் அளிக்கும் தெளிவான விளக்கங்களைக் கேட்கும்போது திமுக உறுப்பினர்கள் யாரும் சபையை விட்டு ஓடிவிடக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் முன்னதாகத் தெரிவித்திருந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சரின் பதிலுரையும், அதையொட்டிய விவாதங்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
