விஜய்யுடன் த்*** குடும்பம் நடத்தி வந்தார்.. பிரபல பாடகி பகீர் தகவல்!
தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள பாடகி சுசித்ரா, நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து பல்வேறு அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சுசித்ரா தனது பேட்டியில், நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதாவை விட்டுப் பிரிந்து, சென்னையில் ஒரு பிரபல நடிகையுடன் இணைந்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இருவரும் பனையூரில் உள்ள இல்லத்தில் தான் வசித்து வந்தனர் என்றும், இது குறித்துப் பல தகவல்கள் திரைத்துறையில் ரகசியமாக இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் மனைவி சங்கீதா, அவருக்குப் பலமுறை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர்களின் உறவில் நீண்ட காலமாக விரிசல் இருப்பதாகவும் சுசித்ரா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். சுசித்ராவின் இந்தப் பேச்சு வெளியான சில மணி நேரங்களிலேயே, விஜய் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது:
அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள விஜய்யின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், ஆதாரமற்ற புகார்களைச் சுசித்ரா கூறி வருவதாகத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விஜய் தரப்பிலிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட நடிகை தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படவில்லை.

பாடகி சுசித்ரா கடந்த காலங்களிலும் திரைத்துறையைச் சார்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெரும்பாலான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில், தற்போது அவர் விஜய்யைச் சாடியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பிலிருந்து இது போன்ற வதந்திகளுக்குப் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து செய்யப்போவதாகப் பலமுறை வதந்திகள் பரவியபோதும், அவை உண்மையல்ல என்று அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் ஏற்கனவே மறுத்திருந்தன.
