“அடுத்த மாதம் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பார்” - புஸ்ஸி ஆனந்த் அதிரடி!

 
விஜய் புஸ்ஸி ஆனந்த் விஜய் புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சென்னையில் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த புஸ்ஸி ஆனந்த், கட்சியின் வெற்றி மற்றும் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசுகையில், "தமிழகம் முழுவதும் தவெக-விற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. தொகுதி வாரியாக நாங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வுகளில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பது உறுதியாகியுள்ளது."

"யார் என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும், அடுத்த மாதம் தமிழகத்தின் முதலமைச்சராகத் தளபதி விஜய் ஆட்சியில் அமருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. யார் எங்களைத் தடுத்தாலும் அல்லது விமர்சித்தாலும், எங்கள் பணி மக்களுக்குச் சேவை செய்வது மட்டுமே. அந்த ஒற்றை இலக்கை நோக்கித் தளபதி தலைமையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்."

விஜய்

தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் வெற்றி குறித்து புஸ்ஸி ஆனந்த் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருப்பது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இன்று சென்னை தி.நகர் மற்றும் எழும்பூர் பகுதிகளில் விஜய் நடத்திய ரோடு ஷோக்களில் திரண்ட மக்கள் கூட்டத்தை முன்வைத்துக் கட்சியின் மேலிடம் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதை இது காட்டுகிறது.