பிரதமர் பதவிக்கான விருப்பத் தேர்வு - முதல்வர் விஜய் 3-வது இடம் பிடித்து சாதனை!
Aug 28, 2026, 07:50 IST
இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய நாட்டின் நடப்பு நிலவரத்திற்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பிரதமர் ரேஸில் தமிழக முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்து தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
நரேந்திர மோடி அவர்கள் 48.7 சதவீத ஆதரவுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 9.2 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்.
மிகக் குறுகிய கால அரசியல் பயணத்தில் தேசிய அளவில் முன்னணித் தலைவர்களுக்குப் போட்டியாக முதலமைச்சர் விஜய் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
