எனதருமை தம்பி தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்... நடிகர் விஜய் ட்வீட்ட்....டூ!

 
விஜய்

 நாளை மார்ச் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன.  மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 10 வகுப்பு பொதுத்தேர்வை எழுதும்  மாணவ மாணவிகளுக்கு தனது வாழ்த்தினை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.


 


இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். அதில்  "தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என தனது வாழ்த்தினை  பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web