வெற்றிப் பயணம்: மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் பெயர் மாற்றம்!
Aug 27, 2026, 15:35 IST
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், அக்டோபர் 2 முதல் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், இத்திட்டத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய பெயர்கள் மற்றும் அடையாள மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு 'வெற்றிப் பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் இலவச பேருந்துகளில் 'வெற்றி பயணம்' என்ற பிரத்யேக டிஜிட்டல் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டு இயக்கப்பட உள்ளன. மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களில் 'மகளிர் கட்டணம் இல்லா பயணம்' என குறிப்பிடப்படவுள்ளதுடன், இப்புதிய மாற்றங்கள் குறித்த முறையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு விரைவில் வெளியிடவுள்ளது.
