எந்தத் தொகுதியைத் தக்கவைப்பார் விஜய்? பெரம்பூர் vs திருச்சி கிழக்கு.. மக்கள் எதிர்பார்ப்பு!

 
vijay vijay

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே அபார வெற்றி பெற்றுள்ளார். இந்தியத் தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஏதேனும் ஒரு தொகுதியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், விஜய் எந்தத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வார் என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது.

விஜய் தற்போது சென்னை நீலாங்கரையில் வசித்து வருவதால், நிர்வாக வசதி மற்றும் கட்சிப் பணிகளைக் கவனிப்பதற்குக் ஏதுவாக அவர் பெரம்பூர் தொகுதியையே தக்கவைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையின் முக்கியப் பகுதியான பெரம்பூரில் அவர் கவனம் செலுத்துவது, அரசியல் ரீதியாக அவருக்குப் பலம் சேர்க்கும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இதனால் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது பிரதிநிதியாக விஜய்யே நீடிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

அதே வேளையில், ஆன்மிகம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்தால், அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும். திருச்சியைத் தமிழகத்தின் மையப்பகுதியாகக் கருதி அவர் அங்குத் தனது எம்.எல்.ஏ. பதவியைத் தொடர்வார் என்ற மாற்றுக் கருத்தும் நிலவுகிறது. இருப்பினும், இரு தொகுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது குறித்த அதிகாரப்பூர்வ முடிவை விஜய் விரைவில் அறிவிப்பார் என்பதால், இரு தொகுதி மக்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.