விஜய் பிற்பகல் 3.30க்கு ஆளுநருடன் சந்திப்பு!

 
தவெக விஜய் தவெக விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்குப் பிற கட்சிகளின் ஆதரவை நாடி வரும் நிலையில், தமிழக ஆளுநரைச் சந்திக்கத் தவெக தலைவர் விஜய் நேரம் கேட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மாளிகை, இன்று (மே 6) மாலை 3.30 மணிக்குச் சந்திப்பிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது தவெக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய், தனது கட்சிக்கு இருக்கும் ஆதரவு மற்றும் ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரல் குறித்து ஆளுநரிடம் முறைப்படி கடிதம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால், விஜய்யின் பலம் அதிகரித்துள்ளது. இவர்களுடன் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், ஆட்சியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகியுள்ளன.

தமிழக அரசியலில் நீண்ட காலமாக நீடித்து வந்த திமுக மற்றும் அதிமுக-வின் இருமுனைப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய கட்சி ஆட்சிப் பீடத்தில் அமரப் போவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநருடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் எப்போது பதவியேற்பார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். கோடிக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.