கோட்டையில் புதிய சரித்திரம்... ”ஜோசப் விஜய்” என்னும் நான்... முதல்வரானார் விஜய்!

 
விஜய் விஜய்


தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய மைல்கல்லாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கச் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் தற்போது அமர்ந்துள்ளார். சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஒரு புதிய மாற்றத்தைத் தொடங்கி வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் காணத் தமிழகமே இன்று திரண்டு வந்துள்ளது. மேடையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலையில்  விஜய் முறைப்படி முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.  

த்ரிஷா

இந்தக் கோலாகலமான விழாவில் பங்கேற்கவும், புதிய முதலமைச்சருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து சென்னை வந்து மேடையில் அமர்ந்துள்ளார். இவருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ள 9 முக்கிய அமைச்சர்களும் மேடையை அலங்கரித்து வருகின்றனர். திரையுலகிலிருந்து விஜய்யின் நெருங்கிய தோழியும் நடிகையுமான திரிஷா, மற்றும் விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் முதல் வரிசையில் அமர்ந்து இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பார்த்து வருகின்றனர்.

சட்டமன்றத்தில் 120 உறுப்பினர்களின் பலத்துடன் மெஜாரிட்டியை உறுதி செய்துள்ள விஜய், ஒரு கூட்டணி அரசாங்கத்தைத் தமிழகத்தில் வெற்றிகரமாகத் தொடங்கி வைக்கிறார். விழாவில் பங்கேற்க வந்துள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களால் நேரு அரங்கம் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகால விதியைத் தீர்மானிக்கப் போகும் இந்தப் புதிய தலைமையின் தொடக்கத்தை, மேடைக்கு வெளியே லட்சக்கணக்கான தொண்டர்கள் விண்ணதிர முழக்கமிட்டுக் கொண்டாடி வருகின்றனர்.