பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை... கி.வீரமணியுடன் சந்திப்பு!

 
வீரமணி வீரமணி

தமிழகத்தின் 13-வது முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காலை முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புச் சடங்குகள் முடிந்த பின், தலைமைச் செயலகம் வந்த அவர் தனது பணிகளைத் தொடங்கினார்.

விஜய்

பதவியேற்ற கையோடு சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு முதல்வர் விஜய் வருகை தந்தார். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார். பின்னர், பெரியார் நினைவிடத்தில் மலர் தூவித் தனது மரியாதையைச் செலுத்தினார்.

விஜய்

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொண்ட முதல் முக்கியப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சமூக நீதிப் பாதையில் தனது அரசு பயணிக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.