வெடித்தது கோஷ்டி பூசல்... முதல்வர் விஜய் மீது மூத்த அமைச்சர் செங்கோட்டையன் கடும் அதிருப்தி!

 
விஜய் செங்கோட்டையன் விஜய் செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையன், தற்போதைய முதல்வர் விஜய் மீது கடுமையான விரக்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. புதிய ஆட்சி அமைந்ததில் இருந்தே தவெக கட்சித் தலைமைக்கும் இவருக்கும் இடையே சில சுமுகமற்ற சூழ்நிலைகள் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகக் கட்சியின் மூத்த நிர்வாகியான தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவர் தரப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

செங்கோட்டையன்

அமைச்சரவை உருவாக்கத்தின் போது மிக முக்கிய இலாகா ஒதுக்கீட்டில்  உரிய முன்னுரிமை தராதது செங்கோட்டையன் தரப்பை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தனது தீவிர ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையிலும், கட்சியின் முக்கிய உயர் பொறுப்புகளிலும் போதிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என அவர் விடுத்த அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தவெக தலைமை முற்றிலும் நிராகரித்து வந்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் வட்டார நிர்வாகிகள் மத்தியில் பெரும் ஏமாற்றமும், மனக்கசப்பும் ஏற்பட்டுள்ளது.

செங்கோட்டையன்

கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் செங்கோட்டையன் தரப்பில் இருந்து தற்போதைக்கு பெரும் ஆதங்கக் குரல்கள் எழுந்து வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் மனஸ்தாபங்கள் காரணமாகத் தவெகவின் அடுத்தகட்ட செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர்  தலையிட்டு  அமைச்சரின் மனக்குறையைப் போக்குவாரா அல்லது இந்த மோதல் மேலும் தீவிரமடையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.