அமைச்சரவையில் 3 அமைச்சர்களை தூக்க முதல்வர் விஜய் தீவிரம் ... 8 பேரின் துறைகள் மாற்றம்!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழகத்தில் தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்துக் கட்சித் தலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதில் தவெகவைச் சேர்ந்த 10 அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் செயல்பாடுகளில் முதல்வர் விஜய்க்குத் திருப்தி இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரு முக்கிய அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே வேளையில் மேலும் 8 அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றி அமைப்பது குறித்தும் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

விஜய் சட்டசபை கூட்டணி கவிழுமா

அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துப் புதிய அமைச்சர்களின் பட்டியல் தயாராகி வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செயல்திறன் குறைபாடு மற்றும் பொதுமக்கள் மத்தியிலான புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. புதிய முகம் கொண்ட நபர்களுக்கும், தீவிரமாகப் பணியாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இந்தத் திடீர் மாற்றங்கள் குறித்த செய்தி தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரப்பரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சீரியஸ்

இருப்பினும் இந்த அமைச்சரவை மாற்றம் உடனடி முடிவாக எடுக்கப்படாமல், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகே நிகழும் எனக் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை தடையின்றிப் பணிகளைத் தொடரவும், அதற்குப் பின் புதிய மாற்றங்களை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் முடிந்த கையோடு புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா மற்றும் இலாகா மாற்றங்கள் முறைப்படி அறிவிக்கப்படும்.