சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம் கொன்டு வந்த முதல்வர் விஜய் !

 
சட்டமன்றம்

 

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும் அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. மேலும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கக் கோரிய இந்த மசோதா இறுதியில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீளவும் கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில், 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ள எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாக உள்ளது.

மத்திய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் மாநிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் தொகுதி மறுவரையறையால் எத்தகைய பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மத்திய அரசின் தலையாய கடமையாகும் என்று முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.