விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்; நவம்பர் 6-ல் நேரில் ஆஜராக உத்தரவு!

 
விஜயபாஸ்கர்

 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.36 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீதான இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விஜயபாஸ்கர்

அப்போது கிடைத்த ஆவணங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், தற்போது அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 6-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விஜயபாஸ்கர் ஆஜராகி அளிக்கும் விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.