"தீமையை நன்மை வெற்றி கொண்டதற்கான கொண்டாட்டமே விஜயதசமி!" – ராம்லீலா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 
ராம்லீலா மோடி

நாடு முழுவதும் விஜயதசமி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கிழக்கு டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா ராம்லீலா மைதானத்தில்  நேற்று நடைபெற்ற சிறப்பு விஜயதசமி கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்திச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற அவர், ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்ட 'ராவண தஹனம்' நிகழ்வைக் கண்டு களித்தார்.

ராம்லீலா கரப்பான்பூச்சி

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "தீமையை நன்மை வெற்றி கொண்டதற்கான மகத்தான கொண்டாட்டமே இந்த விஜயதசமி திருவிழா. உண்மை மற்றும் நேர்மையின் நீடித்த வலிமையை இது நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது."

"வேற்றுமையற்ற, பாரபட்சமற்ற, நீதியை வழங்கக்கூடிய மற்றும் ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கக்கூடிய நிர்வாக நடைமுறையே ராமராஜ்ஜியம் ஆகும். அதில் அதிகாரத்துவம் ஆட்சி செலுத்துகிறது என்பதற்குப் பதிலாக, மக்கள் நலன் மட்டுமே பிரதானமாக உறுதி செய்யப்படும்."

கரப்பான்பூச்சி அபிஜீத் திப்கே

"ஏழைகள் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்குச் சேவை செய்வதே நமது அரசின் உச்சபட்ச முன்னுரிமையாகும். நாம் அனைவரும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' மற்றும் 'சுயசார்பு பாரதம்' ஆகிய இலக்குகளை முன்னிறுத்தித் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்."