'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை திருமணம் செய்யும் விஜய் பட ஹீரோயின்... குவியும் வாழ்த்துக்கள்!

 
நடிகை அபர்ணா தாஸ் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம்

‘ஞான் பிரகாஷன்’ மலையாள படம் மூலமாக திரையுலகிற்குள் நுழைந்த நடிகை அபர்ணா தாஸ் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் மூலம் பிரபலமான நடிகர் தீபக் பரம்போலை இந்த மாதம் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களது திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 

நடிகை அபர்ணா தாஸ், ‘மனோஹரம்’ படத்தில்  நடிகர் தீபக் பரம்போலுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படப்பிடிப்பின் சமயத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் காதலிக்க துவங்கினர். இந்நிலையில், இம்மாதம் மாதம் 24-ம் தேதி இந்த காதல் ஜோடி திருமணத்தில் கைக்கோர்க்கின்றனர். 

நடிகை அபர்ணா தாஸ் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம்

விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் அபர்ணா தாஸ் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே பரவலான கவனிப்பை பெற்றார். இவர் நடிகர் கவினுடன் நடித்த ‘டாடா’ படம் வெற்றிப்படமாக அமைந்தது

From around the web