"விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நீடிக்காது!" - டி.ஆர்.பாலு பேச்சு!

 
டி.ஆர்.பாலு டி.ஆர்.பாலு

"தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது; விரைவில் மாநிலத்தில் பெரிய அரசியல் மாற்றம் வரும்" என திமுக பொருளாளரும், மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி பாலு

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு, தற்போதைய தவெக அரசின் எதிர்காலம் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவினர் சற்றே சோர்வடைந்துள்ள நிலையில், தொண்டர்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் அவர் இந்த மேடையில் பேசினார்.

"நடந்து முடிந்த தேர்தலில் சில அரசியல் சூழ்நிலைகள் காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்டப்பேரவைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சட்டசபைக்குள் நம்முடைய அணியில் இருந்து 50 பேர் மட்டுமே சென்றுள்ளனர். இதைப் பார்த்து திமுக தொண்டர்களோ, நிர்வாகிகளோ யாரும் சற்றும் கலங்கக் கூடாது. திமுக என்பது பல சோதனைகளைக் கடந்து வந்த பேரியக்கம்."

82 வயதில், 7வது முறையாக மக்களவைக்கு தேர்வாகி வரலாறு படைக்கிறார் டி.ஆர் பாலு!

தொடர்ந்து தவெக அரசு குறித்துப் பேசிய அவர், "இப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் தற்போதைய தவெக ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. மிக விரைவிலேயே தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் வரப்போகிறது. இந்த தவெக ஆட்சி ஏன் நீடிக்காது என்பதற்கான  சில காரணங்கள் என்னிடம் உள்ளன. ஆனால், அந்த ரகசியக் காரணங்களை இந்த பொதுமேடையில் என்னால் பகிரங்கமாகச் சொல்ல முடியாது. யாராவது என்னிடம் தனியாக வந்து கேட்டால், அந்த காரணங்களை நிச்சயம் சொல்கிறேன்" என்று மிகவும் சூசகமாக பேசி முடித்தார்.