விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்து சாகசம்... இளைஞருக்கு ₹3,000 அபராதம்!

 
விபத்து விபத்து

சென்னையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார வாகனத்தைப் பின்தொடர்ந்து, ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் ஓட்டிச் சென்ற வாலிபருக்குப் போக்குவரத்து போலீசார் ரூ.3,000 அபராதம் விதித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் மனோஜ் குமார் என்பவரே இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தவெக விஜய்

விஜய் பிரசாரத்திற்காகச் சென்றபோது, அவரது வாகனத்திற்குப் பின்னால் சென்ற மனோஜ் குமார், ஹெல்மெட் அணியாமலும், கைகளை விட்டபடியும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

சமீபகாலமாக விஜய் பிரசாரத்திற்குச் செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு பின்தொடர்வது வழக்கமாகிவிட்டது. இதில் பலர் ஆர்வக்கோளாறால் அதிவேகமாகவும், விதிகளை மீறியும் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. தொண்டர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.