இன்று தமிழகம் முழுவதும் 12,525 கிராமங்களில் கிராம சபை கூட்டம்!!

 
கிராம சபை கூட்டம்

இந்தியா முழுவதும் 77வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் 3 வது முறையாக கொடியேற்றி  தமிழக மக்களுக்கு உரையாற்றி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும்  சுதந்திர தினம், குடியரசு தினம் ,  தொழிலாளர்கள் தினம்  , காந்தி ஜெயந்தி  , உலக நீர் தினம் , உள்ளாட்சிகள் தினம்    என  வருடத்திற்கு 6  முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கிராம சபை கூட்டம்

இந்த நாட்களில்  தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்களில் அவசியம்  பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அந்த வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

கிராம சபை கூட்டம்

முக்கிய ஆலோசனைகள் இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு, பிரதமரின் கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழி கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, ஜல் ஜீவன்இயக்கம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புதிட்டம்  குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.தமிழகத்தில் பருவமழை தொடங்க இருப்பதால்  அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொற்றுநோய் பரவாமல் கட்டுப்படுத்துவது குறித்தும்  இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், கிராமங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பான தகவல்களும் இந்த கூடங்களில்  விளம்பர தட்டிகள் வைத்து அதில் நோட்டீசாக  ஒட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web