தொடர் விபத்துக்கள்... நெடுஞ்சாலைக்கு சேவலை பலியிட்டு கிராம மக்கள் பரிகாரம்!

 
சேவல்


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் முதல் மேல் சங்கம் வரையில் திருவண்ணாமலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்களால் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்கள் மாலை 6 மணிக்கு மேல் அச்சாலைக்கு வருவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது ,

திருவண்ணாமலை

இரண்டு மாதங்களுக்கு முன்பு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று விட்டு பெங்களூர் நோக்கி காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி ஆறு பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து பெங்களூரு அடுத்த டும்கூர் பகுதியில்  வசித்து வரும் இளைஞர்கள் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு பெங்களூரு திரும்பிய போது அதே இடத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்'

விபத்து

/n தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மாலை 6 மணிக்கு மேல் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவி வருவதாகவும் குழந்தைகள் அழுகுரல் கேட்பது போல ஒலிப்பதாகவும் ஆவிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என நினைத்து அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவி வருவதால் அந்தனூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு மஞ்சள் ,குங்குமம் ,விபூதி தூவி சேவல் அறுத்து பம்பை சத்தம் முழங்க நெடுஞ்சாலையில் பரிகார பூஜை செய்து வழிபட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web