அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் சமூக வளைகாப்பு விழா... வைரல் வீடியோ!

 
வளைகாப்பு

 

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

சிட்கோ நகர் சமுதாய நலக் கூட அரங்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் இந்த விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, குழந்தைகளின் வாழ்க்கையில் தாயின் பாசமும் அரவணைப்பும் எவ்வளவு முக்கியம் என்பதைத் தனது சொந்த அனுபவத்துடன் எடுத்துரைத்தார்.

“அம்மா இல்லை என்ற வருத்தம் எனக்குள் இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது” என்று உருக்கமாகக் குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரின் ஆதரவும் அவசியம் என்றார்.

வில்லிவாக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு Community baby shower for pregnant women in Villivakkam... Minister Adhav Arjuna ...

மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு விளையாட்டு, கல்வி உள்ளிட்ட துறைகளில் சாதிக்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.குழந்தைகளைப் புத்தகங்கள் படிக்கச் செய்வதுடன், தலைவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.