பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை? விழுப்புரத்தில் சோகம்!
Nov 13, 2026, 13:30 IST
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் சரண்யா, அரகண்டநல்லூர் அருகே உள்ள துரிஞ்சலாற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சரண்யாவின் உடலை மீட்ட அவர்கள், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யா உயிரிழந்ததற்கான காரணம் என்ன, அவர் இந்த முடிவை எடுக்கக் காரணமான சூழல் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
