முன்னாள் காதலி குறித்து RTI-யில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்... பெரும் பரபரப்பு!

 
ஆர்டிஐ

 

விழுப்புரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், தனது முன்னாள் காதலி குறித்த தனிப்பட்ட விவரங்களை அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் 1,886 கேள்விகளுடன் விண்ணப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் இதற்கு முன்பு எத்தனை பேரைக் காதலித்துள்ளார், அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு அவர் கோரியதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு அதிகமான கேள்விகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாநில தகவல் ஆணையம் விசாரித்தது.

விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்ட இளைஞருக்கு மாவட்ட சுகாதாரத்துறை மூலம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த ஓராண்டுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பிக்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விவரங்களை அறிய அரசு நிர்வாகத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திய இந்தச் சம்பவம் கவனம் பெற்றுள்ளது.