பிள்ளையார் வாங்க, பூஜை செய்ய உகந்த நேரம் இதுதான்!!

 
விநாயகர்

முழு முதற் கடவுள் விநாயகர். நம் விக்னங்களை தீர்ப்பதால் விநாயகர் ஆனார். எளிமையான தெய்வமும் கூட. நாம் பிள்ளையார் என நினைத்து எதில் பிடித்தாலும் அதில் அடைக்கலமாகி விடுவார். மண், கல், மஞ்சள், விபூதி , சாணம் என எந்த பேதமுமில்லை.   குலதெய்வம் இஷ்ட தெய்வம் என பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும் கூட, அவர்களும் வணங்கக் கூடிய கடவுள் எனில் அதுவும் இந்த விநாயகர் தான். அப்படியான விநாயகரை இந்த சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் விசேஷமே.  

விக்னங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு செய்யும் முறை!


விநாயகர் சதுர்த்தி  பூஜைக்கான தேதி, நேரம்:

 விநாயகர் சதுர்த்தி பொதுவாக   ஆவணி மாதத்தில் தான் வருவது வழக்கம். நடப்பாண்டில் புரட்டாசியின் முதல் நாளில் விநாயகர் சதுர்த்தி வந்திருக்கிறது. இந்த சதுர்த்தி திதியானது இன்று  செப்டம்பர் 18  காலை 11.39 மணிக்கு தொடங்கி மறுநாள்  செப்டம்பர் 19ம் தேதி  காலை 11.50 வரை நீடிக்கிறது.   இந்த இரண்டு நாளில்  எந்த நாள் விநாயகரை வணங்க வாய்ப்புள்ளதோ அந்நாளிலே அவரை வணங்கலாம்  
 இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் அன்று காலை 9 மணியிலிருந்து 10.20 மணிக்குள்ளாக விநாயகரை வாங்கி விட வேண்டும்.   பூஜையை அன்று பிற்பகல்  12 மணி முதல் 1.30 மணிக்குள்ளாக செய்யலாம் அல்லது மாலை 6 மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் பூஜை செய்து கொள்ளலாம். 

விநாயகர்


அதே போல் நாளை செப்டம்பர்  19 செவ்வாய்க்கிழமை  விநாயகர் சதுர்த்தி கொண்டாட விரும்பினால்  நாளை  காலை 7 மணி முதல் 8.45 மணிக்குள்ளாக விநாயகர் சிலையை வாங்கி விடலாம். அன்றைய தினம் பூஜை செய்யும் நேரம் காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை செய்யலாம் அல்லது மாலை 6 மணிக்கு மேல்   எப்போது வேண்டுமானாலும் பூஜை செய்து கொள்ளலாம்.
 வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ஒவ்வொருவரும் செய்வது அவசியமானது. அனைவரும் அவர்களது வீட்டில் சிறிய மண் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைப்பது நல்லது...  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web