விநாயகர் சிலைகளைக் கரைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

 
விநாயகர்

 

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு

சிலைகள் செய்வதற்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை அடிப்படையாகக் கொண்ட ரசாயன வண்ணப் பூச்சுகளைப் பயன்படுத்துவதும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே சிலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். நீர்நிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த கடுமையான வழிகாட்டுதல்களைத் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.