ஏரியில் கரைக்க முடியாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை! காரணம் இதுதான்!

 
விநாயகர்

 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் விநாயகர் சிலையை ஏரியில் கரைக்கச் சென்ற பக்தர்களுக்கு தண்ணீர் இல்லாததால் அதிர்ச்சி ஏற்பட்டது.சோமலா பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் 3 நாட்கள் பூஜை செய்து வழிபட்டனர். இதையடுத்து சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் பணிகள் நடைபெற்றன.ஆனால், சோமலா பகுதியில் தற்போது வறட்சியான காலநிலை நிலவி வருவதால் நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை.

 Tamil Nadu Sets 2027 Target To Stop Ganesh Idol Immersion In Natural Water Bodies. . . . . #Trending #News #ganeshutsav #Visarjan #9xm

சின்ன சோமலா கிராமத்தில் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலையை அருகிலுள்ள போஜ்ஜ மல்லையா ஏரியில் கரைப்பதற்காக பக்தர்கள் கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு ஏரி முழுவதும் வறண்டு, சிலையை கரைப்பதற்கு தேவையான தண்ணீர் இல்லை. இதனால் விநாயகர் சிலையை கரைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் சிலையை ஏரியின் நடுப்பகுதியில் வைத்து சென்றனர். தற்போது தண்ணீர் இல்லாமல் ஏரியின் நடுவே விநாயகர் சிலை வைக்கப்பட்டிருக்கும் காட்சி கவனத்தை ஈர்த்துள்ளது.வறட்சி காரணமாக விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.