விநாயகர் சிலை ஊர்வலத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் இருவர் படுகாயம்... பகீர் வீடியோ!
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காகக் கொண்டு செல்லப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்தனர்.
-
மும்பை குர்லா (Kurlers) பகுதியில் உள்ள சீத்தல் தலாப் (Sheetal Talao) அருகில் இச்சம்பவம் நடைபெற்றது.
-
ஊர்வலமாக டிராக்டர் அல்லது தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட 15 அடி உயர விநாயகர் சிலை, அப்பகுதியில் இருந்த வேகத்தடை மீது வாகனம் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்து சேதமடைந்தது. இச்சம்பவத்தின் போது பீதியடைந்தும் அதிர்ச்சியடைந்தும் அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் மயக்கமடைந்து காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது சிலைகள் ஊர்வகத்தில் இதுபோன்று எதிர்பாராத விபத்துகள் ஏற்படுவது அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
