நீதிமன்ற உத்தரவை மீறிய விவகாரம்... பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகர் ரவிமோகன்!
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக, நடிகர் ரவிமோகன் பகிரங்கமாக மன்னிப்பைக் கோரியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் உத்தரவு மீறல் தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில், நடிகர் ரவிமோகன் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"நான் எப்போதும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கும் முழுமையான மதிப்பளிப்பவன். சமீபத்தில் ஊடகங்களில் என்னால் சொல்லப்பட்ட கருத்துகளால் யாரேனும் மனவேதனை அடைந்திருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டிருந்தாலோ, அவர்கள் அனைவரிடமும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும் மனமார்ந்த பகிரங்க மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

சமீபத்தில் இவரது தோழி கெனிஷாவுக்கு அவதூறு வழக்கில் ஷார்ஜா நீதிமன்றம் அபராதம் விதித்திருந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு விவகாரத்தில் ரவிமோகன் மன்னிப்பு கோரியிருப்பது திரைத்துறை மற்றும் ஊடக வட்டாரங்களில் விவாதமாக மாறியுள்ளது.
