நொய்டாவில் வெடித்த வன்முறை - ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்கள் போராட்டம்... 144 தடை உத்தரவு - ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு!

 
வாகனம் தீவைப்பு வன்முறை நொய்டா வாகனம் தீவைப்பு வன்முறை நொய்டா

நொய்டாவின் முக்கியத் தொழில்பேட்டை பகுதியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம், திடீரென வன்முறையாக மாறியது. இதனால் நொய்டா - கிரேட்டர் நொய்டா இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நொய்டாவில் உள்ள பிரபலத் தனியார் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள், கடந்த சில நாட்களாக ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி அமைதியான முறையில் போராடி வந்தனர். இன்று காலை நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், நிறுவனத்தின் நுழைவாயில் கதவுகளை உடைக்க முயன்றனர்.

தேர்தல் சோதனை பறிமுதல் போலீசார்

போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் முயன்றபோது, இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்ததோடு, நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியது.

நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதைத் தொடர்ந்து, நொய்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கூடுதல் போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் போலீசார் லேசான தடியடி நடத்தினர். பதற்றம் நிலவும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாகச் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

144

"பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தபோதும், சில வெளிநபர்கள் புகுந்து வன்முறையைத் தூண்டிவிட்டனர்" எனத் தனியார் நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், "எங்கள் நியாயமான கோரிக்கைகளை மதிக்காமல் போலீசார் மூலம் எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்" எனத் தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது நொய்டாவின் செக்டார் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, ஒருவித மயான அமைதி நிலவி வருகிறது.