தமிழகத்தில் அடுத்தடுத்து கொடூரம்... வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கைது!
Mar 16, 2026, 07:23 IST
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வீட்டில் தனியாக இருந்த 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூத்துக்குடியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளியைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திரேஷ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 44). இவர் மீன்பிடி தொழிலாளி ஆவார். தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், குளச்சல் பகுதியில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில் வேலை பார்த்து வந்தார்.


