திருப்பதியில் நாளை அக்.1 மற்றும் 5-ம் தேதிகளில் வி.ஐ.பி தரிசனம் முழுவதுமாக ரத்து!

 
திருப்பதி பெருமாள் வெங்கடாஜலபதி துளசி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால், சாமானிய பக்தர்களின் நலனைக் கருதி குறிப்பிட்ட தேதிகளில் வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வி.ஐ.பி. தரிசனங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இதனால் அந்நாட்களில் வி.ஐ.பி தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் திருப்பதி தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது.

திருப்பதி திருமலை

புரட்டாசி மாதக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், இலவச சர்வதரிசன வழியில் வருகை தரும் சாமானிய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து விரைவாகச் சுவாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தேதிகளில் வி.ஐ.பி. தரிசனத்திற்குத் திட்டமிட்டிருந்த பக்தர்கள் தங்களது பயணத் திட்டத்தை இதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.