அமெரிக்க ஐடி வேலையைத் துறந்து விப்ரோ முன்னாள் பொறியாளர் சசி குமாரின் 'அக்ஷய கல்பா' ரூ.600 கோடி வெற்றிப் பயணம்!

 
vipro

 

அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் சம்பளம் தரும் உயர்தர ஐடி வேலையைத் துறந்துவிட்டு, சொந்த நாட்டிற்குத் திரும்பி விவசாயத் துறையில் சாதனை படைத்துள்ளார் சசி குமார். இவர் தொடங்கிய 'அக்ஷய கல்பா' (Akshaya Kalpa) என்ற இயற்கை பால் உற்பத்தி நிறுவனம், இன்று பல்வேறு சவால்களைக் கடந்து ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் ஈட்டும் ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்து சாதனை படைத்துள்ளது. கார்ப்பரேட் வாழ்க்கையை விடுத்து விவசாயத்தை நம்பிய இவரது பயணம் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

 

எந்த ஒரு பெரிய வெற்றிகரமான தொழிலின் பின்னேயும் பல கஷ்டங்கள் இருப்பது போல, சசி குமாரின் இந்தப் பயணமும் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. அமெரிக்காவில் கைநிறையச் சம்பாதித்துக் கொண்டிருந்த மகனின் முடிவைக் கேட்ட அவரது தந்தை இத்தொழிலுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், தொடக்கத்தில் கடுமையான நிதி நெருக்கடிகளையும் இந்நிறுவனம் சந்திக்க நேரிட்டது. இத்தகைய இக்கட்டான சூழலில், தனது மனைவியின் உறுதுணையோடும் உதவியோடும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு நிறுவனத்தை மீட்டெடுத்தார் சசி குமார்.