வைரல் வீடியோ... 7 வருடங்களாக காதலித்து, ஊர் சுற்றிவிட்டு, வேறொரு பெண்ணுடன் திருமணம்... காதலி கொடுத்த செம ஷாக் ட்ரீட்மெண்ட்!

 
உபி

காதலி செய்த வேலையைப் பார்த்து ஊரே மெச்சுகிறது. உத்தரபிரதேசத்தில், தன்னை 7 வருடங்களாக காதலித்து, ஒன்றாக ஊர் சுற்றி வந்த நிலையில், தற்போது தன்னை ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய இருந்த காதலனின் வீட்டுக்கு இளம்பெண் ஒருவர் மேளதாளங்கள் மற்றும் பேனருடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஏலம் நகரில் நவம்பர் 21-ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. டேராடூனைச் சேர்ந்த சோனியா என்ற பி.எஸ்சி. மாணவி, அங்குஷ் என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

மெர்ச்சன்ட் நேவியில் பணியாற்றி வரும் அங்குஷுக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயித்துள்ளனர். இதனை அறிந்த சோனியா, தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய அங்குஷ் முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, மேளதாளங்கள் மற்றும் பேனருடன் அங்குஷின் வீட்டுக்குச் சென்ற சோனியா, தனது காதலுக்கு நியாயம் கேட்டு எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.