வைரல் வீடியோ.. மெட்ரோவில் அட்ராசிட்டி... பாத் டப் டிரெஸ்ஸுடன் வலம் வந்த இளம்பெண்!
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் குளியல் உடை அணிந்து கொண்டு, முகத்தில் அழகு பராமரிப்புப் பேட்ச்களுடன் பயணம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட பெண் குளியல் உடை அணிந்தும், தலையில் துண்டு கட்டியபடியும், கண்களுக்குக் கீழே சருமப் பராமரிப்புக்கான 'அண்டர் ஐ பேட்ச்' ஒட்டியபடியும் மெட்ரோ ரயிலில் இயல்பாக அமர்ந்து பயணம் செய்கிறார்.
பொது இடத்தில் இதுபோன்று தனது தனிப்பட்ட அழகு பராமரிப்பு வழக்கத்தை அவர் மேற்கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகளும், நெட்டிசன்களும், "இது மெட்ரோ ரயிலா அல்லது பியூட்டி பார்லரா?" என்று கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் இது போன்ற விநோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் டெல்லி மெட்ரோவில் அரங்கேறி வருவது பயணிகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
