வைரல் வீடியோ.. பைக்கில் வந்து டார்ச்சர்.. இளைஞரை ஓட ஓட விரட்டிய சிறுமி!

 
பரேய்லி சிறுமி

நாடு முழுவதும் சிறு குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண் குழந்தையை கூட தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்கின்றனர். இதுத்தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் வருவதை கண்டு அதிர்ச்சியடைகிறோம். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் பரேய்லி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவரிடம் பேசுமாறு அவரை துன்புறுத்தியுள்ளார். அந்த நபர் தொடர்ந்து சிறுமியை விரட்டி துன்புறுத்தி வந்தார்.

போலீஸ்
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, சாலையில் கிடந்த கற்களை எடுத்து அந்த நபர் மீது வீசியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கட்டான தருணத்தில் சிறுமியின் துணிச்சலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!