வைரல் வீடியோ... ரோடு ஷோ வாகனத்தில் ஏறி நடிகர் விஜய்யை தெறிக்க விட்ட ரசிகர்!

 
ரோடு ஷோ வாகனத்தில் ஏறி நடிகர் விஜய்யை தெறிக்க விட்ட ரசிகர்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கோவை சென்றுள்ளார். நாளை விஜய் தலைமையில் கோவையில்  பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு சென்றுள்ளார்.  கோயம்புத்தூர் வந்த நடிகர் விஜய்க்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து நடிகர் விஜய் திறந்த வாகனத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு கிளம்பினார்.  


இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் திறந்த வெளி வாகனத்தில்  ரோடு ஷோ நடத்தியவாரே வாகனத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்ற போது  செல்லும் இடமெல்லாம் தொண்டர்களின் கூட்டம் கடல் அலை போல நிறைந்திருந்தது.  நடிகர் விஜய் வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியாக செல்லும் நிலையில் திடீரென ரசிகர் ஒருவர் வாகனத்தின் மீது ஏறி வந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


அவர் விஜயை பார்த்த உற்சாகத்தில் வாகனத்தின் மீது ஏறி நின்று கும்பிடு போட்டபடியே நின்றார். ஒரு நிமிடம் ஷாக் ஆன விஜய்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி அந்த ரசிகரை அங்கிருந்து பத்திரமாக கீழே இறக்கி விட்டார். இருப்பினும் விஜய் அந்த இடத்தில் கோபப்படவே இல்லை அந்த ரசிகரை பார்த்து மகிழ்ச்சியாகவே வணக்கம் கூறினார். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web