வைரல் வீடியோ... இந்தியாவின் டிஜிட்டல் பிச்சைக்காரர்... கியூஆர் கோடு மூலம் தான் கலெக்‌ஷன்!

 
கியூஆர்கோடு

 டிஜிட்டல் இந்தியா என்ற அறை கூவல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பிளாட்பார்ம் கடைகள் தொடங்கி கோவில்களில் இ உண்டியல், ஷாப்பிங் மால்கள் வரை அனைத்துமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்தியா வளர்ந்து வருகிறது என மார்தட்டுகின்றனர் அரசியல்வாதிகள் .  ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களும் இப்போதெல்லாம் டிஜிட்டல் முறையில் தான் . அசாமின் கவுஹாத்தியில் பார்வையற்ற பிச்சைக்காரர் டிஜிட்டல் முறையில் க்யூஆர்கோடு வைத்துள்ளார்.


 

இவருக்கு பிச்சை கொடுக்க விரும்புபவர்கள் ஆன்லைன் பேமெண்ட் கொடுக்கலாம். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பிச்சைக்காரர் கழுத்தில்  PhonePe QR குறியீடு கொண்ட கார்டு இருக்கிறது.   பிச்சைக்காரர் காரில் இருக்கும் இரண்டு பேரை அணுகி பிச்சை கேட்க, அவர்களில் ஒருவர் அவருக்கு ரூ10   அனுப்புவதற்காக QR குறியீட்டை ஸ்கேன் செய்ததும் இதனை உறுதிப்படுத்த பிச்சைக்காரர் தனது தொலைபேசியை காதுக்கு அருகில் கொண்டு செல்கிறார்.  இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் கவுரவ் சோமானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்  "இது ஒரு சிந்தனையைத் தூண்டும் தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

சமையல் சிலிண்டர்களில் கியூஆர் கோடு
"தொழில்நுட்பம் உண்மையில் எல்லையே இல்லாதது. சமூக-பொருளாதார நிலையிலும் கூட, தடைகளைத் தாண்டிச் செல்லும் தொழில்நுட்பத்தின் சக்திக்கு இது ஒரு சான்றாகும்" என ஆளும்கட்சியை சாடியுள்ளார்.  ஏற்கனவே இதே போல், பீகாரின் பெட்டியா ரயில் நிலையத்தில் 40 வயதான ராஜு படேல் என்ற பிச்சைக்காரர் தனது கழுத்தில் QR குறியீடு கொண்ட போர்டு ஒன்றை மாட்டிக்கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்டதும்  சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து அந்த டிஜிட்டல் பிச்சைக்காரர்  பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியைக் கேட்க மறப்பதில்லை எனவும்   டிஜிட்டல் பிச்சைக்காரர் ராஜு படேல் கூறியுள்ளார்.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web