வைரல் வீடியோ.. போதை ஆசிரியருக்கு செருப்படி.. தக்க பாடம் புகட்டிய மாணவர்கள்!

 
போதை ஆசிரியர்

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பாலிப்பட்டா தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தினமும் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்காமல் தரையில்தான் தூங்குகிறார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது கேட்டால், ஆசிரியர் திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குழந்தைகள்,  ஆசிரியருக்கு தக்க பாடம் எடுக்க முடிவு செய்தனர்.

சமீபத்தில், போதை ஆசிரியர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதால், ஆத்திரமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து போதை ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். செருப்பு அதிகமாக பறந்ததால், ஆசிரியர் பைக்கை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார். குழந்தைகள் அவரை பின்தொடர்ந்து சென்று செருப்பை வீசி விரட்டினர்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடிபோதையில் ஆசிரியரை குழந்தைகள் செருப்பால் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web