வைரல் வீடியோ... விவசாயிகளுக்கு மோதிரம் பரிசளித்து அசத்திய விஜய்!

 
விஜய்

  
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த முதல் மாநாடு நடைபெற்ற இடம் கொடுத்த விவசாயிகளை கௌரவப்படுத்தும் வகையில்  நடிகர் விஜய்   சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விவசாயிகள் மற்றும்   குடும்பத்தினரை நேரில் அழைத்து விருந்து கொடுத்தார்.

அத்துடன் ஒரு தாம்பூலத்தட்டு  வேஷ்டி, சேலை வாழைப்பழம், ஆரஞ்சு பழம் உட்பட 5 வகையான பழங்கள், மஞ்சள் குங்குமம் மற்றும் பூ இவைகளை கொடுத்துள்ளார்.  அதன் பிறகு பந்தல் ஏற்பாட்டை கவனித்துக் கொண்டவருக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கிய விஜய் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருக்கும் தங்க மோதிரம் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார்.  இந்நிலையில் நடிகர் விஜய் கொடுத்த பரிசுகள் குறித்த  வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 நடிகர் விஜய் விவசாயிகளுக்கு இடம் கொடுத்ததற்காக பணம் மட்டுமே கொடுக்காமல்   நேரில் அழைத்து கௌரவப்படுத்தியது மற்றும் அவர்களிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். நடிகர் விஜய் தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். இதுகுறித்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web