மலைப்பாதையில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து! 21 பேர் பயணம்; 5 பேருக்குக் காயம்

 
விபத்து

 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் சுற்றுலாவுக்காக கேரளா சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த பேருந்து, கொல்லம் மாவட்டம் கும்பவருட்டி அருகே திங்கள்கிழமை காலை விபத்துக்குள்ளானது.

ஆம்புலன்ஸ்

மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதிக்குள் கவிழ்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காலை சுமார் 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் 4 முதல் 5 பேர் வரை லேசான காயமடைந்ததாகவும், யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்படவில்லை என்றும் அச்சன்கோவில் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது