2 முறை விசா நிராகரிப்பு... இளம் பெண் தற்கொலை!
Sep 5, 2026, 18:45 IST
இங்கிலாந்துக்கான மாணவர் விசா விண்ணப்பங்கள் இருமுறை நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக இருபத்தைந்து வயதுடைய இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அஞ்சனா என்ற அந்த இளம் பெண் உயர் கல்விக்காக இங்கிலாந்து செல்லத் தயாராகி அதற்கான விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் அவரது விண்ணப்பம் இரண்டு முறையும் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டதால் வாழ்க்கையின் மீது வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
